Automotive Testing Expo India 2020

உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு


22-24 ஜனவரி 2020ГОДА
அரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா


செய்திகள் காட்டு


கம்பியில்லாத பியெஜோஎலெக்ட்ரிக் ஆக்செலரோமீட்டர்
DJB Instruments - Stall 3051

கம்பியில்லாத் தொழில்நுட்பமானது, கம்பிகளால் பிணைக்கப்பட்ட பரிசோதனைச் சாதனத்தைவிட அதிகச் சுதந்திரம், நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அதனால்தான் DJB இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இந்தியத் தானியங்கிப் பரிசோதனைத் திருவிழா 2018ல் தன்னுடைய புதிய கம்பியில்லாத பியெஜோஎலெக்ட்ரிக் ஆக்செலரோமீட்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள், உலகிலேயே இந்நிறுவனத்தின் PE-வேவ் பியெஜோஎலெக்ட்ரிக் கம்பியில்லா ஆக்செலரோமீட்டர் படைப்புகளை முதன்முறையாகப் பார்க்கிற மிகச்சிலரில் இடம்பெறுவார்கள். செயல்திறனிலும் சிறிதாக்குதலிலும் புதிய புரட்சிகளை உண்டும் பண்ணும்வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் தயாரிப்புகள் இவை. இத்துடன், DJB உயர்-வெப்பநிலைத் தீர்வுகள், சிறிய IEPE ஆக்செலரோமீட்டர்கள் (வெறும் 0.19கிராமில் தொடங்கி) மற்றும் புதிய AF மின்தடுப்பு உச்சிப்பகுதி வகைகள், இன்லைன் சமிக்ஞை நிலைப்படுத்தும் முன்னேற்றங்கள் உள்படத் தன்னுடைய அனைத்து வகை ஆக்செலரோமீட்டர்களையும் காட்சிப்படுத்தும். ஆக்செலரோமீட்டர்கள், கேபிள்கள், ஜங்ஷன் பாக்ஸ்கள், கருவியைக்கொண்ட சுத்தியல்கள் மற்றும் அனைத்துப் பயன்பாடுகளுக்கான பலவிதமான நிலைப்படுத்தல் தீர்வுகளைப்பற்றி விவாதிக்க, இந்நிறுவனத்தின் ஸ்டாலுக்கு வாருங்கள்.

ஸ்டால் 3051

செய்திக்குத் திரும்புக